கீழஈரால் கிராமத்தில்இலவச மருத்துவ முகாம்
கீழஈரால் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் கிராமத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம், பொதுநல மருத்துவமனை மற்றும் கீழஈரால் ஊராட்சி மன்றம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாமை நடத்தின. கீழ ஈரால் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள காத்தவ நாடார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமிற்கு கோவில்பட்டி பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம் தலைமை தாங்கினார். மருத்துவமனை செயலாளர் தங்கராஜ், கோவில்பட்டி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை கீ ஈரால் ஊராட்சி மன்ற தலைவர் பச்சை பாண்டியன் தொடங்கி வைத்தார். முகாமில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, ரத்த வகை கண்டறிதல், மற்றும் கண் பரிசோதனை நடந்தது. முகாமில் 300-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.