திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் மின் நிறுத்தம்


திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில்   இன்று முதல் 4 நாட்கள் மின் நிறுத்தம்
x

மின்பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக திருவண்ணாமலை மேற்கு பகுதியில் இன்று முதல் 4 நாட்கள் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

மின்பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக திருவண்ணாமலை மேற்கு பகுதியில் இன்று முதல் 4 நாட்கள் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலைய மின்பாதைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 4 நாட்கள் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று பெருந்துறைப்பட்டு, பறையம்பட்டு, எடக்கல், அத்திபாடி, அண்ணாநகர், பீமாரப்பட்டி, செம்மம்பட்டி, குறுக்களாம்பூர், ஏரித்தண்டா, மல்காப்பூர், பெ.குயிலம், விஜயப்பனூர், தானிப்பாடி, கீரனூர் மற்றும் திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

நாளை (புதன்கிழமை) குபேரப்பட்டினம், காவேரிப்பட்டினம், மோத்தக்கல், அண்ணாநகர், ராயண்டபுரம், போந்தை, அத்தியந்தல், அய்யம்பாளையம், கணந்தம்பூண்டி, கிளியாபட்டு, அவலூர்பேட்டை பைபாஸ் ரோடு பகுதிகள், வானவில் நகர், தென்றல் நகர், காமாட்சி அம்மன் கோவில் தெரு, திருமஞ்சன கோபுர தெரு, திருவூடல் தெரு, குமரகோவில் தெரு, மாட வீதி, மஷார், சத்தியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

23-ந் தேதி (வியாழக்கிழமை) குபேரப்பட்டிணம், திருவடத்தனூர், அருவங்காடு, பெரியகோளாப்பாடி, சுகர்மில் பீடர், வெங்காயவேலூர், இனாம்காரியந்தல், வள்ளிவாகை, குன்னியந்தல், எட்டியாபுரம், சானானந்தல், மேப்பத்துரை, கீழ்பொத்துரை, கீழாத்தூர், தாமரை நகர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தாழனோடை, மலையனூர் செக்கடி, இளயாங்கண்ணி, நெரிஞ்சிபாடி, வாழவச்சனூர், நல்லவன்பாளையம், பாலியப்பட்டு, மலப்பாம்பாடி, குறிஞ்சி நகர், நேதாஜி நகர், இனாம்காரியந்தல், சத்திரம், புதுமல்லவாடி, தேனிமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், காந்தி நகர், அஜிஸ்காலணி, வேடியப்பன் கோவில் தெரு, காந்தி நகர் பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜஸ்ரீ தெரிவித்து உள்ளார்.


Next Story