மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு போதிய பலம் இல்லை என்பதை மாற்றும் விதமாக இந்த தேர்தல் அமைய வேண்டும்;அமைச்சர் சு.முத்துசாமி பேச்சு


மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு போதிய பலம் இல்லை என்பதை மாற்றும் விதமாக இந்த தேர்தல் அமைய வேண்டும்;அமைச்சர் சு.முத்துசாமி பேச்சு
x

மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு போதிய பலம் இல்லை என்பதை மாற்றும் விதமாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு போதிய பலம் இல்லை என்பதை மாற்றும் விதமாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் மேட்டுக்கடை பகுதியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணிக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும் என்பது மக்களின் தீர்க்கமான முடிவாக உள்ளதால், நமது வெற்றியை யாராலும் மாற்ற முடியாது. அதேநேரம் மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு போதிய பலம் இல்லை என்பதை மாற்றும் விதமாக இந்த தேர்தல் அமைய வேண்டும். தி.மு.க. அரசின் 1½ ஆண்டு கால திட்டங்கள், வளர்ச்சி பணிகள், மக்களுக்கு சென்றடைந்துள்ள பயன்களை பட்டியலிட்டு மக்களிடம் கூற வேண்டும்.

அதிக வாக்குகள்...

கடந்த ஆட்சியால் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால், சில திட்டங்கள் தாமதமாகி உள்ளன. நிதி நிலையை சரி செய்தால்தான் தமிழகத்தில் நல்ல திட்டங்களை ஏற்படுத்த முடியும். அதற்காகத்தான் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளது. பல திட்டங்களை நிறைவேற்ற, மத்திய அரசுடன் மாநில அரசு போராட வேண்டிய நிலையும் உள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், சில திட்டப்பணிகள் தாமதம் ஆகிறது.

எனவே தான், வாக்குறுதியில் வழங்கிய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பதை மக்களிடம் விளக்க வேண்டும். உண்மையான காரணத்தை மக்கள் கட்டாயமாக ஏற்பார்கள். திருமகன் ஈவெரா மறைவால் ஏற்பட்ட அனுதாபத்தால் மட்டுமின்றி, முதல்-அமைச்சரின் சாதனையாலும் அதிக வாக்குகள் பெற வேண்டும். கடந்த தேர்தலில் திருமகன் ஈவெரா 8 ஆயிரத்து 900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை அதைவிட பல மடங்கு கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும்.

அத்திக்கடவு -அவினாசி திட்டம்

அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகளை தொடங்கி வைக்க வரும் முதல்-அமைச்சர், ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி விழா மாநாட்டில் பங்கேற்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி பேசினார்.

கூட்டத்தில் மாநகர செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் எம்.பி. கந்தசாமி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், நெசவாளர் அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சச்சிதானந்தம், மண்டல தலைவர் பழனிசாமி, பகுதி செயலாளர்கள் நடராஜன், சேகர், ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story