தேனி மாவட்டத்தில் 190 போலீசார் பணி இடமாற்றம்


தேனி மாவட்டத்தில்  190 போலீசார் பணி இடமாற்றம்
x

தேனி மாவட்டத்தில் 190 போலீசாரை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்

தேனி

தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீசார் குறித்த பட்டியலை சேகரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார். அதன்படி போலீசாரின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து ஒரே போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பணியாற்றிய 190 போலீசாரை வேறு போலீஸ் நிலையங்களுக்கு இ்டமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இவ்வாறு பணி இடமாறுதல் செய்யப்பட்ட போலீசார் தற்போது பணியாற்றும் போலீஸ் நிலையங்களில் இருந்து, பணியில் இருந்து விடுவித்துக் கொண்டு, புதிதாக ஒதுக்கப்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியில் சேர வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.


Next Story