தேனி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 34 பேர் ஒரே நாளில் கைது


தேனி மாவட்டத்தில்  புகையிலை பொருட்கள் விற்ற 34 பேர் ஒரே நாளில் கைது
x

தேனி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 34 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்

தேனி

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன் இணைந்து பல்வேறு கடைகளில் போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் நடத்திய இந்த சோதனையில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 34 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட கடைக்காரர்களுக்கு மொத்தம் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 17 கடைகளுக்கு 'சீல்' வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story