தேனி மாவட்டத்தில்கஞ்சா வியாபாரிகள் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தேனி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தேனி அல்லிநகரம் பகுதியில் கடந்த மாதம் கஞ்சா கடத்தி வந்து, அதனை சிலர் பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில், தேவாரம் மூனாண்டிபட்டியை சேர்ந்த ஸ்ரீதர், பாண்டீஸ்வரன் என்ற பாண்டி, அல்லிநகரம் வெங்கலாகோவில் தெருவை சேர்ந்த கோபிநாத் (வயது 28), ராஜா என்ற கோழிராஜா (27), அம்பேத்கர் தெற்கு தெருவை சேர்ந்த குமார் (30) ஆகிய 5 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறை காவலில் வைக்கப்பட்டனர்.