தேனி மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 7 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில்  தலைமை ஆசிரியர் உள்பட 7 பேருக்கு கொரோனா
x

தேனி மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது

தேனி

தேனி மாவட்டத்தில் 4 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியது. கடந்த சில நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்று 108 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் போடி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.


Next Story