தேனி மாவட்டத்தில்நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் போலீசார் ஆய்வு


தேனி மாவட்டத்தில்நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் போலீசார் ஆய்வு
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் போலீசார் ஆய்வு செய்தனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்பனை செய்ய தயாராக வைத்திருந்த ஆலைகளை கலெக்டர் ஷஜீவனா பூட்டி சீல் வைத்தார். இந்த நிலையில் மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் ஆய்வு நடத்தினர். அப்போது பொருட்களின் இருப்பு மற்றும் தரம் ஆகியவை குறித்து சோதனை நடத்தினர். ரேஷன் பொருட்களை முறையாக கையாள அறிவுரை வழங்கினர். மேலும் விதிகளை மீறும் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்.


Next Story