தேனி மாவட்டத்தில் கந்து வட்டி புகார்கள் மீது கடும் நடவடிக்கை
தேனி மாவட்டத்தில் கந்து வட்டி புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்
தேனி
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையை தடுக்கும் வகையில் "ஆபரேசன் கந்துவட்டி" என்ற பெயரில் கந்துவட்டி புகார்கள் சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையை தடுக்கும் பொருட்டு கந்துவட்டி தொழில் செய்வோர் மீது நிலுவையில் உள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கந்துவட்டி சம்பந்தமாக பொதுமக்கள் யாராவது பாதிக்கப்பட்டால் உடனடியாக அதுகுறித்து போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கலாம். அந்த புகார் மனுக்களின் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story