தேனி மாவட்டத்தில் உள்ளஅரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்


தேனி மாவட்டத்தில் உள்ளஅரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்
x

கோப்புக்கட்சி 

தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 8:12 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

அரசு விடுதிகள்

தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில். 4-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும், கல்லூரியில் இளநிலை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கும் அவர்கள் தங்கி படிப்பதற்கு ஏதுவாக மொத்தம் 37 ஆதிதிராவிடர் நல அரசு விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை கடந்த 1-ந்தேதி தொடங்கியது. வருகிற 30-ந் தேதி வரை மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. இதற்கு https://tnadw-hms.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்துக்கும், வீட்டுக்குமான தொலைவு 5 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகள், பெற்றோரை இழந்து பாதுகாவலர் பொறுப்பில் உள்ள மாணவர்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது.

பிற்படுத்தப்பட்டோர்

அதுபோல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டேர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 29 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 4-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இதில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது. இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிறுவனத்தின் தொலைவு 8 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும். அந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுள்ள மாணவ, மாணவிகள் இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதியில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளுக்கு வருகிற 15-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள்ளும் விடுதி காப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தகவல்களை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.


Next Story