தேனி மாவட்டத்தில்சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் இன்று ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021-2023-ம் ஆண்டுக்கான பொதுக்கணக்கு குழுவினர் இன்று தேனி மாவட்டத்தில் ஆய்வு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
தேனி
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021-2023-ம் ஆண்டுக்கான பொதுக்கணக்கு குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) தேனி மாவட்டத்தில் ஆய்வு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 2013-14 முதல் 2020-21-ம் நிதியாண்டு வரையுள்ள ஆண்டுகளுக்கான அறிக்கைகளில் உள்ள தேனி மாவட்டம் சார்ந்த துறைகள் தொடர்பான தணிக்கைகளையும் இந்த குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அதுதொடர்பான திட்டப் பணிகளை பார்வையிட உள்ளனர். ஆய்வுக்கு பின்னர், மாலை 3 மணியளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story