தேனி மாவட்டத்தில் வெள்ளை ரக பட்டுக்கூடுகள் விலை உயர்வு


தேனி மாவட்டத்தில்  வெள்ளை ரக பட்டுக்கூடுகள் விலை உயர்வு
x

தேனி மாவட்டத்தில் வெள்ளை ரக பட்டுக்கூடுகள் விலை உயர்ந்துள்ளது

தேனி

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை, கோட்டூர், சின்னமனூர், கூடலூர், போடி மீனாட்சிபுரம், ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மல்பெரி செடிகள் சாகுபடி நடைபெறுகிறது. இதன் மூலம் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கோலார் கோல்டு (மஞ்சள்), வெள்ளை ரக பட்டுக்கூடு அனைத்து பருவங்களிலும் உற்பத்தியாகும். ஆனால் சரியான விலை கிடைப்பதில்லை. இதற்கிடையே வெள்ளை ரக பட்டு்க்கூடுகளுக்கு சந்தைகளில் கடும் கிராக்கி உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் வெள்ளை ரக பட்டுக்கூடு 80 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வகை பட்டுக்கூடு வளர்ப்புக்கு மிதமான பருவநிலை முக்கியமானதாகும். இவ்வாறு உற்பத்தியாகும் வெள்ளைரக பட்டுக்கூடுகள் கோவை, ஒசூர், கர்நாடக மாநிலம் ராம்நகர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பட்டுக்கூடு உற்பத்தி விவசாயி கூறுகையில்:- நான் ஒரு ஏக்கரில் மல்பெரி செடிகள் சாகுபடி செய்துள்ளேன். இதன் மூலம் 80 அட்டைகள் வரை வளர்க்கலாம். முட்டை வைத்த 30 நாட்களில் புழுக்கள் நன்றாக வளர்ந்து விடும். 80 முட்டைகள் வளர்த்தால் 60 முதல் 70 கிலோ வரை கூடுகள் உற்பத்தியாகும். இதற்கிடையே கடந்த மாதம் ரூ.500 க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை ரக பட்டுக்கூடு ரூ.650 முதல் ரூ.700 வரை விற்பனையாகிறது என்றார்.


Next Story