தேவாரத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்
தேவாரத்தில் ஒற்றை காட்டுயானை விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது
தேவாரம் வனப்பகுதி அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் உள்ளது. இதில் தென்னை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஒற்றை காட்டுயானை விளைநிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதோடு தோட்ட காவலாளி மற்றும் விவசாயி உள்பட 13 பேரை கொன்றது.
இதனால் அந்த பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு விவசாயிகள் அச்சதுடன் சென்று வந்தனர். கடந்த சில மாதங்களாக ஒற்றை காட்டு யானை விளைநிலங்களுக்குள் புகாமல் இருந்தது. இந்த நிலையில் தேவாரம்- ரெங்கநாதபுரம் சாலையில் உள்ள ஆசை என்பவரது தோட்டத்துக்குள் ஒற்றை காட்டுயானை புகுந்து அங்குள்ள மரவள்ளிக்கிழங்கு செடிகள், மோட்டாரை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்தது. இன்று காலை தோட்டத்துக்கு சென்ற விவசாயி இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் வனத்துறையிடம் புகார் செய்தார். இதைதொடர்ந்து வனத்துறையினர் தோட்டத்திற்கு சென்று சேத விவரங்களை ஆய்வு செய்தனர்