திருமாநிலையூரில், போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் தர்ணா
திருமாநிலையூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
கரூர் மாவட்ட அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் திருமாநிலையூரில் உள்ள ஈரோடு மண்டல கிளை அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. கிளை செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார்.
கிளைத்தலைவர் பரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முடிவில் பொருளாளர் ராஜலிங்கம் நன்றி கூறினார். இதில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
சீருடை வழங்க வேண்டும்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்க வேண்டும், அதற்குரிய தையல்கூலி வழங்க வேண்டும், தரமான உதிரி பாகங்களை வாங்க வேண்டும், தனியார் பஸ் மற்றும் மினி பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும், சம்பள ஒப்பந்த ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.