தூத்துக்குடி மாநகராட்சியில்சொத்து வரி, குடிநீர் கட்டண வசூலை துரிதப்படுத்த வேண்டும்: மேயர் ஜெகன் பெரியசாமி


தூத்துக்குடி மாநகராட்சியில்சொத்து வரி, குடிநீர் கட்டண வசூலை துரிதப்படுத்த வேண்டும்: மேயர் ஜெகன் பெரியசாமி
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டண வசூலை துரிதப்படுத்த வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில், மாநகராட்சி மண்டல அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மண்டல உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் ராஜபாண்டி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது, சொத்துவரி, குடிநீர் கட்டணம் வசூலை துரிதப்படுத்த வேண்டும். பிளான் அப்ரூவல் தொடர்பாக நடந்து வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து முள்ளக்காடு பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் அமைந்து உள்ள குளம் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குளத்தின் கரையில் பேவர் பிளாக் சாலை மற்றும் கைப்பிடி கம்பிகள் அமைக்கவும், அந்த பகுதியில் பொதுமக்கள் ஓய்வெடுக்க வசதியாகவும், பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக கழிப்பறைகள் அமைக்கவும், அந்த பகுதியை சுற்றி இரும்பு வேலி அமைத்து பாதுகாப்பாக வைக்குமாறும் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, தெற்கு மண்டல தலைவர் ஆ.பாலகுருசாமி, உதவி செயற்பொறியாளர் குறள்செல்வி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story