தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 96.44 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி


தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 96.44 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
x

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 96.44 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 96.44 சதவீதம் மாணவர்களும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 92.88 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

பொதுத் தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும், செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களில் தங்கள் மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர். அதேபோன்று ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களின் மதிப்பெண்கள் விவரம் ஒட்டப்பட்டு இருந்தன. இதனையும் மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

பிளஸ்-2

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 8 ஆயிரத்து 900 மாணவர்கள், 10 ஆயிரத்து 473 மாணவிகள் ஆக மொத்தம் 19 ஆயிரத்து 373 பேர் எழுதினர். இதில் 8 ஆயிரத்து 380 மாணவர்கள், 10 ஆயிரத்து 303 மாணவிகள் ஆக மொத்தம் 18 ஆயிரத்து 683 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.44 சதவீதம் ஆகும். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சியில் 10-வது இடத்தை பிடித்து உள்ளது.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 613 பேர் தேர்வு எழுதியதில் 5 ஆயிரத்து 371 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 95.69 சதவீதம் தேர்ச்சி ஆகும். தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 983 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 8 ஆயிரத்து 654 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.34 சதவீதம் ஆகும். திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 777 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 4 ஆயிரத்து 658 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 97.51 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

எஸ்.எஸ்.எல்.சி

இதேபோன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 833 மாணவர்கள், 11 ஆயிரத்து 461 மாணவிகள் ஆக மொத்தம் 22 ஆயிரத்து 294 பேர் எழுதினர். இதில் 9 ஆயிரத்து 615 மாணவர்கள், 11 ஆயிரத்து 91 மாணவிகள் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 706 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 92.88 சதவீதம் ஆகும். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சியில் 9-வது இடத்தை பிடித்து உள்ளது.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 803 பேர் தேர்வு எழுதியதில் 6 ஆயிரத்து 256 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 91.96 சதவீதம் தேர்ச்சி ஆகும். தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 241 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 9 ஆயிரத்து 692 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.64 சதவீதம் ஆகும். திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 250 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 4 ஆயிரத்து 758 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 90.63 சதவீதம் தேர்ச்சி ஆகும்.


Next Story