தூத்துக்குடி ஹவுசிங் போர்டு குடியிருப்பில் கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுகிறதா?: போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


தூத்துக்குடி ஹவுசிங் போர்டு குடியிருப்பில்  கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுகிறதா?: போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு குடியிருப்பில் கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுகிறதா?: என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுகிறதா? என போலீஸ்சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்.

விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஒவ்வொரு பகுதியாக நேரடியாக ரோந்து சென்று போதை பொருட்கள் புழக்கம் உள்ளதா? போதை பொருட்களை பதுக்கி வைத்து யாரும் விற்பனை செய்கிறார்களா? என்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை ெசய்யப்படுவதாக கூறப்படும் பகுதிகளுக்கு ேபாலீஸ் சூப்பிரண்டு திடீர் சோதனை நடத்தி வருகிறார்.

மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு

அந்த வகையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் மீனவர்கள், பொதுமக்கள், மீன் வியாபாரிகளை நேரில் சந்தித்து அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அந்த பகுதியிலும் மறைவான இடங்களுக்கு சென்று அவர் ேசாதனை நடத்தினார். நேற்று தூத்துக்குடி ஹவுசிங் போர்டு குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார். அந்த பகுதியிலுள்ள மறைவான இடங்களில் அவர் சோதனை நடத்தினார்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

அப்போது போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், போதை பொருட்கள் விற்பனை, கடத்தல் குறித்து தகவல் அறிந்தால் பொதுமக்கள் 83000 14567 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். மாவட்டம் முழுவதும் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து ேபாதை பொருட்கள் விற்பனை செய்வதை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கஞ்சா வியாபாரிகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக பொதுமக்கள் மேற்கண்ட செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும், என்றார். இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டுடன் தனிப்பிரிவு போலீசார் உடன் இருந்தனர்.


Next Story