தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்31 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்


தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 31 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 31 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடந்தது.

சிறப்பு முகாம்

தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகின்றன. காய்ச்சல், இருமல், உடல் வலி, தலைவலி, ஜலதோஷம், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ளன. இந்த வகையான காய்ச்சல் 4 நாட்கள் முதல் 7 நாட்கள் வரையும், அல்லது 2 வாரம் முதல் 4 வாரங்கள் வரை தொடருகின்றன. இந்த வகையான தொற்று நோயை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் 1000 சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

1337 பேருக்கு பரிசோதனை

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் 21 இடங்களிலும், தேசிய குழந்தைகள் நலத்திட்ட குழு மூலம் 10 இடங்களிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 1337 பேர் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர். சளி, இருமலால் பாதிக்கப்பட்ட 346 பேருக்கும், வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட 44 பேருக்கும், காய்ச்சலால் பாதிக்கப்படட 7 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மாநகர பகுதிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா? என்றும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் ஆய்வு செய்யப்பட உள்ளது என்று ஆணையாளர் ச.தினேஷ்குமார் கூறினார்.


Next Story