தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்பு


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 7:19 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்கள் கண்டறியப்பட்டு தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது. அதன்படி முத்தம்மாள் காலனியில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 20 செண்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்து இருந்தாராம். இது குறித்து அறிந்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து அந்த நபர் உதவி கலெக்டர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன் மீது விசாரணை நடத்திய உதவி கலெக்டர், அந்த நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில் நகரமைப்பு செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றி 20 செண்ட் நிலத்தை மீட்டனர். இதன் மூலம் கடந்த 4 மாதங்களில் மட்டும் மாநகராட்சிக்கு சொந்தமாக கதிர்வேல்நகர், பைபாஸ் ரோடு, திருச்செந்தூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன.


Next Story