தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை தொடங்குகிறது
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை தொடங்குகிறது என ஆணையாளர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சாலையோர வியாபாரிகள்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கான திட்டத்தில் தகுதியான சாலையோர வியாபாரிகளின் சமூக பாதுகாப்பு மற்றம் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக, நடப்பு ஆண்டில் புதிய கணக்கெடுபபு நடத்தப்பட உள்ளது. அதன் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்கள் சிரமம் இன்றி வியாபாரம் செய்வதற்கு ஏற்ப சூழல் உருவாக்க அரசால் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
கணக்கெடுப்பு
இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் 15 நாட்கள் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. மாநகராட்சியால அனுமதிக்கப்பட்ட தனியார் நிறுவன களப்பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே கணக்கெடுப்பு பணியாளர்கள் கேட்கும் விவரங்கள், ரேஷன்கார்டு, புகைப்படம், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை நகல்கள் போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும். இந்த வாய்ப்பை சாலையோர வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.