தூத்துக்குடியில்திங்கட்கிழமைஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்முன்னிலையில்மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.


தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்திங்கட்கிழமைஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்முன்னிலையில்மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் திங்கட்கிழமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

மாற்றுக்கட்சியினர் இணைப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ராஜேஷ் ரவிசந்தர் ஏற்பாட்டில், நாம் தமிழர் கட்சியின் சாயர்புரம் நகரத் தலைவர் பாலமுருகன் தலைமையில் தங்கவேல், ரமேஷ், கார்த்தி, ஜெபசிங், கற்குவேல், மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரி சங்கர், சாயர்புரம் பேரூர் செயலாளர் கண்ணன், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

நாய்கள் கண்காட்சி

திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அளவிலான நாய்கள் நலன் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நாய் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கால்நடை உற்பத்தி மையம் இயக்குனர் மீனாட்சி சுந்தரம் வரவேற்று பேசினார். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, கருத்தரங்க மலரினை வெளியிட்டு, சிறந்த நாய்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, சிறப்புரையாற்றினார்.

நாட்டு இன நாய்கள்

அவர் பேசுகையில், கால்நடைகளில் நாய்கள் மட்டுமல்ல அனைத்து நாட்டு இனங்களும் காப்பாற்றப்பட வேண்டும் என தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக நாட்டுப்பசு இனத்தை காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தும் நாட்டு இன காளைகள் எல்லாம் காக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் விவசாயத்திற்கும், வண்டிகள் இழுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. தற்போது அந்த பயன்பாடுகள் இல்லையென்றாலும் அவற்றை காக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி

அதேபோல் ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற நமது நாட்டு இன நாய்கள் ராணுவம், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டு இன நாய்களை வளர்க்கும் இளைஞர்களை மனதார பாராட்டுகிறேன். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் கால்நடைகளுக்கு ஏராளமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்றார்.

இந்த கண்காட்சியில், நாய்களுக்கான இலவச பரிசோதனை சிகிச்சை முகாம், வெறிநோய்க்கான தடுப்பூசி, நாட்டின நாய்களுக்கு நுண் சில்லு பொருத்துதல் போன்றவை நடந்தது.

இதில், பல்வேறு இனங்களை சேர்ந்த 342 நாய்கள் கலந்து கொண்டன.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் க.ந.செல்வக்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, கூட்டுறவு சங்க தலைவர் உமரி சங்கர், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ரிச்சர்டு ஜெகதீசன், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர்கள் செல்வகுமார், ஜோசப் ராஜா, சங்கரநாராயணன், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், நகர செயலாளர் வாள்சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.


Next Story