தூத்துக்குடி பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.5 லட்சம்
தூத்துக்குடி பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.5 லட்சம் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியின் மத்திய பகுதியில் இந்து அறநிலையத்துறை-யின் கீழ் இயங்கி வரும் மிகவும் பழமையான புகழ்பெற்ற ஆலயமான வைகுண்டபதி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு 6-மாதங்களுக்கு ஒரு முறை என வருடத்திற்கு 2-முறை கோவில் உண்டியல் எண்ணப்படும். அதன்படி நேற்று கோவில் உண்டியலில் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது. இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் சரவணன் மற்றும் சிவன்கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, மற்றும் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் ருக்மணி ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியலில் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இந்த காணிக்கை என்னும் பணியில் மகளிர் குழு மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் ரூ.5 லட்சத்து 4 ஆயிரத்து 61 இருந்தது.
Related Tags :
Next Story