திங்களூரில் மொபட் திருடியவர் கைது


திங்களூரில்  மொபட் திருடியவர் கைது
x

திங்களூரில் மொபட் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

கோபி

பெருந்துறை வெட்டையன்கிணறு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் திங்களூர் வாரச்சந்தைக்கு வெளியே நேற்று மாலை தனது மொபட்டை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அந்த மொபட்டை தள்ளிக்கொண்டு பெருந்துறை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த திங்களூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் சீனாபுரம் மலைக்கோவில் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பதும், அந்த மொபட்டை அவர் திருடிக்கொண்டு சென்றதையும் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தார்.


Next Story