திருச்செந்தூர் பகுதியில்விடுதலை சிறுத்தைகள் கட்சி புதிய நிர்வாகிகள் தலைவர்கள் சிலைக்கு மாலை


திருச்செந்தூர் பகுதியில்விடுதலை சிறுத்தைகள் கட்சி புதிய நிர்வாகிகள் தலைவர்கள் சிலைக்கு மாலை
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி புதிய நிர்வாகிகள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மறு சீரமைப்பு அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருங்கிணைந்த தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களின் மண்டல செயலாளராக முரசு தமிழப்பன், மாவட்ட செயலாளராக மணப்பாடு டிலைட்டா ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நியமனம் செய்து அறிவித்துள்ளார். புதிய பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மண்டல செயலாளர் முரசு தமிழப்பன்,மாவட்ட செயலாளர் மணப்பாடு டிலைட்டா ஆகியோர் திருச்செந்தூரிலுள்ள மகாத்மா காந்தி சிலை, வ.உ.சிதம்பரனார் சிலை, அண்ணா சிலை, கெளதம புத்தர், காமராஜர் சிலை, காயாமொழியில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை, நா.முத்தையாபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை, நடுநாலுமூலைகிணற்றில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், துணை செயலாளர் மணிகண்ட ராஜா, கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளார் தமிழ்க்குட்டி, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன், உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி, செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்டிமுத்து, முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் கன்னிமுத்து, திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர் மாதவன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய துணை செயலாளர் அரிகிருஷ்ணன், திருச்செந்தூர் நகர பொருளாளர் தோப்பூர் சரண், துணை செயலாளர் ஜெயின் ஜெயபால், உடன்குடி ஒன்றிய சமூக நல்லிணக்கப் பேரவை ஒன்றிய அமைப்பாளர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story