திருச்செந்தூர் வட்டாரத்தில்நெற்பயிரில் அதிக மகசூல் பெறுவது எப்படி?:விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை


திருச்செந்தூர் வட்டாரத்தில்நெற்பயிரில் அதிக மகசூல் பெறுவது எப்படி?:விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் வட்டாரத்தில் நெற்பயிரில் அதிக மகசூல் பெறுவது எப்படி? என்று விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

உடன்குடி:

திருச்செந்தூர் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிருக்கு ஜிங்க் சல்பேட்டை இடுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்செந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துத்தநாக சத்து குறைபாடு

நெல் பயிருக்கு அடிப்படையாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள், தழை சாம்பல், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு ஆகியவை ஆகும். ஒரே நிலத்தில் தொடர்ந்து நெற்பயிர் சாகுபடி செய்வதால், நிலத்தில் எப்போதும் நீர் தேங்கி, கரையா உப்புகள் அதிகளவு அதிகரித்து துத்தநாகச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மண்ணில் சுண்ணாம்புத்தன்மை அதிகம் இருந்தால், துத்தநாகச் சத்து பயிருக்கு கிடைக்க இயலாத நிலை ஏற்படும்.

பயிருக்கு தேவையான அளவுக்கு அதிகமாக மணிச்சத்து மக்னீசம்சத்து மற்றும் இரும்புச் சத்து இடுவதால் அவை துத்தநாகச் சத்தின் செயல் திறனைக் குறைக்கிறது.

பயிர் வளர்ச்சி பாதிக்கும்

எனவே துத்தநாக சத்து பற்றாக்குறை இருந்தால், பயிர் வளர்ச்சிபாதிக்கப்பட்டு, இளம் இலைகள் மஞ்சள் நிற கோடுகள் கொண்டதாக மாறிவிடும். பின்னர், காய்ந்து விடும். நடு நரம்பினை ஒட்டிய பகுதிகள்வெண்மை நிறக் கோடுகள் உருவான இலைகள் வெளுத்து காணப்படும். இலைத்தாளின் அகலம் குறைந்து சிறுத்து காணப்படும். நெற்கதிர் தூர்கள் பிடிக்கும் பருவத்தில் தூர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதோடு, மலட்டுத் தன்மையுடன் காணப்படும். இதனால், விளைச்சல்குறைவு ஏற்படும். மகசூல் அதிகமாக பாதிக்கப்படும்.

துத்தநாக சல்பேட்

எனவே, துத்தநாகச் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் பயிர் நடவுக்கு முன்பு ஒரு முறையும், நடவுக்கு பின் 30 முதல் 40 நாள்களுக்கு ஒரு முறையும் இட்டு, பயிரின் துத்தநாகச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து பயிரின் மகசூல் இழப்பை தவிர்க்கலாம். தற்போது ஜிங்க் சல்பேட் அல்லது துத்தநாக சல்பேட் திருச்செந்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story