திருச்செந்தூர் நகராட்சியில் பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்பு : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
திருச்செந்தூர் நகராட்சியில் பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் நடந்த நகராட்சி பகுதி சபா கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பகுதிசபா கூட்டம்
திருச்செந்தூரில் நகராட்சி பகுதி சபா கூட்டம் 1-வது வார்டு குமாரபுரத்தில் நடந்தது. பகுதி சபா குழு உறுப்பினர்கள் குருசுமுத்து, சுதா அரவிந்த், செல்வம், டேனியல் ஜெபசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர திமுக செயலாளர் வாள் சுடலை வரவேற்று பேசினார்.
அமைச்சர் பங்கேற்பு
கூட்டத்தில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டார். பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக பொதுமக்களுக்கு உறுதி அளித்தார். கூட்டத்தில்,
அனைத்து தெருக்களிலும் வடிகால் வசதியுடன் தார் சாலை அமைப்பது, திருச்செந்தூர் நகராட்சி அனைத்து வார்டுகளிலும் 5 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீர், 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டும். பொன்னன்குறிஞ்சி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டுவர சுமார் ரூ.45 கோடி மதிப்பில், இடைப்பட்ட ஊர்களில் தரை தளத் தொட்டி அமைத்து தர கேட்பது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயலெட்சுமி, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சி ஆணையாளர் வேலவன், சுகாதார மேற்பார்வையாளர் வெற்றிவேல் முருகன், மின்சார வாரிய இளநிலை பொறியாளர் முத்துராமன், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், நல்லூர் பஞ்சாயத்து தலைவர் பரிசமுத்து, அரசு வக்கீல் சாத்ராக், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.