திருச்செந்தூர் கோவிலில் 10 ஊழியர்களுக்கு நிரந்த பணி நியமன ஆணை


திருச்செந்தூர் கோவிலில் 10 ஊழியர்களுக்கு நிரந்த பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 4:10 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிலில் 10 ஊழியர்களுக்கு நிரந்த பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிய 10 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அதன்படி, கோவிலில் அர்ச்சகராக பணியாற்றிய ஹரிகர சுப்பிரமணிய பட்டர் உப கோவிலான ஓமநல்லூர் கோவில் அர்ச்சகராகவும், அய்யப்பன் பலவேலை செய்பவராகவும், ராஜாராம் அலுவலக உதவியாளராகவும், இசைகுமார் சிவில் பிரிவில் தொழில்நுட்ப உதவியாளராகவும், ஆனந்தராஜ் அலுவலக உதவியாளராகவும், பரதன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் பலவேலை செய்பவராகவும், பாலசுப்பிரமணியன் வேதபாட ஆசிரியராகவும், சேகர் என்ற ஹரிகர சுப்பிரமணியன் உப கோவிலான சுந்தரவிநாயகர் கோவில் அர்ச்சகராகவும், செல்லம்மாள் உப கோவிலான நாசரேத் சக்திவிநாயகர் கோவில் அன்னதான பிரிவில் சமையல் பணியாளராகவும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

இவர்கள் 10 பேருக்கும் பணி நியமன ஆணைகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் வழங்கினார். கோவில் இணை ஆணையர் கார்த்திக், கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.



Next Story