திருச்செந்தூரில் 3 பக்தர்களின் கார்களை உடைத்து பணம் திருட்டு
திருச்செந்தூரில் 3 பக்தர்களின் கார்களை உடைத்து பணம் திருடப்பட்டது.
திருச்செந்தூர்:
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல் குமாரபுரம் ஸ்கூல் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் பாலகிருஷ்ணன் (வயது 24). திருவனந்தபுரம் ஆளப்புறம் பாகிலியன் நாயர் மகன் ஆனந்த் (29). சிவகாசிமங்கலம் ராமச்சந்திரபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சோலை மகன் கலைமுத்துசெல்வம் (34), இவர்கள் 3 பேரும் நேற்று தனித்தனியாக காரில் குடும்பத்தினருடந் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அவர்கள் நாழிக்கிணறு கார் நிறுத்துமிடத்தில், கார்களை நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் சென்றுள்ளனர். பின்னர் வந்து பார்த்த போது கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது. பாலகிருஷ்ணன் காரில் இருந்த ரூ.7 ஆயிரம், ஆதார், பான்கார்டு, லைசென்ஸ் மற்றும் கலைமுத்துசெல்வம் காரில் இருந்த ரூ.3 ஆயிரத்து 700 ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். ஆனந்த் காரில் எதுவும் சிக்கவில்லை. எனினும் அவர் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து 3 பேரும் கோவில் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்