திருச்செந்தூரில் அகில பாரத இந்து மகாசபாவினர் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் அகில பாரத இந்து மகாசபாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவிற்கு விரதம் இருக்கும் பக்தர்களை கோவிலுக்குள் தங்கி விரதம் இருக்க அனுமதிக்க வலியுறுத்தி, நேற்று மாலையில் திருச்செந்தூர் ஒன்றிய அகில பாரத இந்து மகா சபா சார்பில், மாவட்ட துணை தலைவர் பகவதி பாண்டியன் தலைமையில் திருச்செந்தூர் ரயிலடி ஆனந்த விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து பகத்சிங் பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாநில செயலாளர் அய்யப்பன், மாநில துணை தலைவர் சுந்தரவேல், மாவட்ட செயலாளர் ராம்குமார் மற்றும் 7 பெண்கள் உள்பட 26 பேரை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் கைது செய்தார்.
Related Tags :
Next Story