திருச்செந்தூரில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு


திருச்செந்தூரில்  அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்கா பெயர் பலகைக்கும், நா.முத்தையாபுரம் மற்றும் நடுநாலுமூலைகிணற்றில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல் முத்து, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், சட்டமன்ற தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், தமிழ் நாடு ஆதிதிராவிடர் நலச்சங்க மாநில தலைவர் பிரேம்குமார், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story