திருச்செந்தூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு கேட்டும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க திருச்செந்தூர் வட்ட கிளை சார்பில் கறுப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்செந்தூர் தாலூகா அலுவலகம் முன்பு நடந்த இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு வட்ட தலைவர் வைரமுத்து தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் கணேசபெருமாள், திருச்செந்தூர் வட்ட செயலாளர் சரவணன், திருச்செந்தூர் கோட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் 5 பெண்கள் உள்பட 25 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story