திருச்செந்தூரில் மனித சங்கிலி போராட்டம்


திருச்செந்தூரில்  மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டம் நடந்தது. இதற்கு திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், மண்டல செயலாளர் தமிழினியன், மதிமுக மாவட்ட பொருளாளர் காயல் அமானுல்லா, காயல் சமூக நீதி பேரவை செயலாளர் வக்கில் அகமது சாகிப், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வக்கீல் முத்துக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆண்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் மாரிசெல்வம், மனித நேய ஜனநாயக கட்சி முகம்மது நஜீப், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story