திருச்செந்தூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, வக்கீல்கள் சங்க தலைவர் ஜேசுராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், வக்கீல்களுக்கான சேமநலநிதி ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மூத்த வக்கீல்கள் சந்திரசேகர், எட்வர்ட் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வக்கீல்கள் சங்க செயலாளர் முத்துகுமார் நன்றி கூறினார். போராட்டத்தை முன்னிட்டு வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுப்பட்டனர். இதனால் திருச்செந்தூரில் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.
Related Tags :
Next Story