திருச்செந்தூரில்விடுதலை சிறுத்தைகள் கட்சி பேரணி, பொதுக்கூட்டம்


திருச்செந்தூரில்விடுதலை சிறுத்தைகள் கட்சி பேரணி, பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் எதிர்புறம் உள்ள மைதானத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 14-ம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க பேரணி மற்றும் சனாதன எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார்.

முன்னதாக திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகே தொடங்கியை பேரணியை காயல் சமூக நீதி பேரவை செயலாளர் அகமது சாகிப் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி வக்கப்பிளைவிளை, இரும்பு ஆர்ச்சு, காமராஜர் சாலை, பகத்சிங் பஸ்நிலையம் வழியாக வந்து பொது கூட்டம் நடைபெறும் இடத்தை சென்றடைந்தது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொது செயலாளர் கலைவேந்தன், கருத்தில் பரப்பு மாநில துணை செயலாளர் அமுதன் துரை அரசன், தமிழ் நாடு ஆதிதிராவிடர் நலச் சங்கம் மாநில செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் தர்மராஜ், தமிழக உழவர் இயக்கம் மாநில துணை செயலாளர் தமிழ்வளவன், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story