திருச்செந்தூரில்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பஜாரில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகள் காரணமாக அகற்றப்பட்ட வி.சி.க. கொடி கம்பத்தை கடந்த 14-ந் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளன்று அதே இடத்தில் மீண்டும் அக்கட்சி சார்பில் கொடி கம்பம் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தட்டார்மடம் போலீசார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் நேற்று அக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் அருகே கட்சி சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்டிமுத்து, ஆறுமுகநேரி நகர செயலாளர் வெள்ளத்துரை, ஆழ்வார்திருநகரி நகர செயலாளர் மாணிக்கம், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் யாசர் அராபத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story