திருச்செந்தூரில்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் பல ஆண்டுகளாக பூ, பழங்கள் மற்றும் சுண்டல் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவில் வளாகத்தில் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்ய கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதை உடனே திரும்பப்பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார்.
இதில், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், திருச்செந்தூர் தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர் டிலைட்டா, கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர் ராவணன் நன்றி கூறினார்.