திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம்


திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட ஆத்தூர், ஆறுமுகநேரி, மணப்பாடு, உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் தாலுகாவை சுற்றி உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடக்கிறது. இந்த மாதத்துக்கான முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறப்பு டாக்டர்கள் குழு மூலம் நடக்கிறது.

எனவே திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அடையாள அட்டை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story