திருச்செந்தூரில்பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சியில் வீட்டு வரி, கடை வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நகர பா.ஜ.க. சார்பில் பகத்சிங் பஸ் நிலையம் அருகே நேற்று மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். நகர தலைவர் நவமணிகண்டன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், வர்த்தக அணி மாநில தலைவர் ராஜகண்ணன், மாவட்ட பொது செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட செயலாளர் அர்ஜூன் பாலாஜி, மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், மேனேஜமென்ட் பிரிவு மாவட்ட செயலாளர் வக்கீல் கிரீஷ்குமார், ஓ.பி.சி. அணி மாநில தலைவர் விவேகம் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story