திருச்செந்தூரில் சொர்க்கபுரி ஆதீன மடத்தின் சொத்துக்களை மீட்க கோரிக்கை


திருச்செந்தூரில்  சொர்க்கபுரி ஆதீன மடத்தின்   சொத்துக்களை மீட்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் சொர்க்கபுரி ஆதீன மடத்தின் சொத்துக்களை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தேசிய பெருந்தலைவர் கு.காமராஜ் அறக்கட்டளை மற்றும் நற்பணி மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்செந்தூர் உதயம் இண்டர்நேஷ்னல் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நற்பணி மன்ற நிறுவனர் சக்திவேல் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக சொர்க்கபுரி ஆதீனகர்த்தர் 22-வது குரு தண்டபாணி ஞானதேசிக மடாதிபதி சொர்க்கபுர ஆதீனம், நற்பணி மன்ற மாநில தலைவரும் இயக்குனருமான பரமானந்தன், பா.ஜனதா மாவட்ட பொது செயலாளர் சிவமுருக ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சொர்க்கபுரி ஆதீன திருமட சொத்துக்களை, குறிப்பாக திருச்செந்தூரில் உள்ள சொத்துக்களையும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களுக்கு குளியலறை, கழிவறை வசதி, தங்கும் விடுதி அமைத்துத் தரக்கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நற்பணி மன்ற மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணன், ஆறுமுகநேரி நகர தலைவர் வேலாயுதம், நகர அமைப்பாளர் மந்திரமூர்த்தி, நகர செயலாளர் முருகேசன், தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் பகவதி பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட அமைபபு செயலாளர் தனலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story