திருச்செந்தூரில்வாகன உதிரிபாகங்களை திருடிய ஆட்டோ டிரைவர் கைது


திருச்செந்தூரில்வாகன உதிரிபாகங்களை திருடிய ஆட்டோ டிரைவர் கைது
x

திருச்செந்தூரில் வாகன உதிரிபாகங்களை திருடிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் வாகனபழுதுநீக்கும் கடையில் வாகன உதிரிபாகங்களை திருடிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வாகன பழுதுநீக்கும் கடை

திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டணம் குறிஞ்சிநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 47). இவர், திருச்செந்தூர் ராஜ்கண்ணா நகர் தெற்கு தெருவில் ஆட்டோ வாகன பழுநீக்கும் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 15-ந் தேதி இரவு, வேலை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு காளிராஜன் வீடு திரும்பினார். மறுநாள் காலையில் சென்ற போது கடை கதவு உடைக்கப்பட்டு வாகனங்களின் உதிரி பாகங்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.85 ஆயிரம் ஆகும்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

இதைதொடர்ந்து அவர் தனது கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, ஆட்டோவை பழுது நீக்க வந்த காயல்பட்டினம் மன்னராஜா கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மாதவராஜ் (37) என்பவர், கடையில் இருந்த வாகனங்களில் உள்ள உதிரிபாகங்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து காளிராஜன் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

கைது

துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாதவராஜை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட வாகன உதிரி பாகங்களைபோலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story