திருச்செந்தூரில்ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் விழா
திருச்செந்தூரில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில், இந்து தொழிலாளர் ஆட்டோ முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு பேசினார். பின்னர், நல வாரிய அட்டையை இணையதளத்தில் பதிவது குறித்து சேர்மதுரை பேசினார். மேலும், விழாவில் இந்து ஆட்டோ தொழிலாளர் நல சங்க தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் கணேஷ், திருச்செந்தூர் நகர இந்து முன்னணி பொதுச் செயலாளர் முத்துராஜ், திருச்செந்தூர் நகர பொறுப்பாளர் ஆனந்த் மற்றும் இந்து ஆட்டோ முன்னணியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.