திருவண்ணாமலை மாவட்டத்தில் 28,697 மாணவர்கள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்


திருவண்ணாமலை மாவட்டத்தில் 28,697 மாணவர்கள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 28,697 மாணவ, மாணவிகள் எழுதினர். 2,784 பேர் தேர்வு எழுத வரவில்லை.

திருவண்ணாமலை



திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 28,697 மாணவ, மாணவிகள் எழுதினர். 2,784 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பிளஸ்-1 பொதுத்தேர்வு

தமிழகத்தில் நேற்று தொடங்கி பிளஸ்-1 பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்விற்காக செய்யாறு கல்வி மாவட்டத்தில் 51 தேர்வு மையங்களும், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 69 தேர்வு மையங்களும் என மொத்தம் 120 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் தனித் தேர்வர்களுக்கு என 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 31 ஆயிரத்து 481 பள்ளி மாணவ, மாணவிகளில் 28 ஆயிரத்து 697 பேர் தேர்வு எழுதினர். இதில் 2,784 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வில் தோல்வியுற்று மீண்டும் இத்தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுத வராத மாணவர்களினாலும், பள்ளி இடைநின்ற மாணவர்களினாலும் தேர்வு எழுத வாராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வு பணியில் 3 ஆயிரம் பேர்

மேலும் தேர்வு மையங்களில் 127 முதன்மை கண்காணிப்பாளர்கள், 140 துறை அலுவலர்கள், 138 பறக்கும் படையினர், 1,875 அறை கண்காணிப்பாளர்கள், 485 சொல்வதை எழுதுபவர்கள், 31 வழித்தட அலுவலர்கள், 5 தொடர்பு அலுவலர்கள், 10 மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், 125 எழுத்தர்கள் மற்றும் 125 அலுவலக உதவியாளர் என மொத்தம் 3 ஆயிரத்து 61 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லாத மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பஸ் வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. முன்னதாக தேர்வு மையங்களுக்கு வந்த மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் ஆசி பெற்றும், கோவில்களில் சாமி கும்பிட்டு விட்டும் வந்தனர்.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் பிளஸ்-1 தேர்வு எழுதும் மாணவிகளுக்கென சிறப்பு வழிபாடு செய்து மாணவிகளுக்கு ஆசிரியைகள் திலகமிட்டு தேர்விற்கு அனுப்பி வைத்தனர்.


Next Story