திருவாரூரில், 92 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது


திருவாரூரில், 92 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது
x

கோடைக்காலம் தொடங்கி விட்ட நிலையில், திருவாரூரில் 92 டிகிரி வரை வெயில் சுட்ெடரித்தது. இதனால் பாதசாரிகள்-வாகனஓட்டிகள் அவதியடைந்தனர்.

திருவாரூர்


கோடைக்காலம் தொடங்கி விட்ட நிலையில், திருவாரூரில் 92 டிகிரி வரை வெயில் சுட்ெடரித்தது. இதனால் பாதசாரிகள்-வாகனஓட்டிகள் அவதியடைந்தனர்.

கத்தரி வெயில்

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி விட்டது. திருவாரூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த மாதம் முதல் வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 104 டிகிரி வரை வெயில் அடித்தது. அதில் திருவாரூரில் 100 டிகிரி வரை வெயில் அடித்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் மே மாதம் தொடங்குகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதற்கிடையில் திருவாரூரில் அடிக்கடி மழை, பனிப்பொழிவு என்று இருந்து வருகிறது. திருவாரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று 92 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இந்த வெயிலின் தாக்கத்தால் கண் எரிச்சல், உடல் வெப்பம் அதிகரிக்கிறது.

வெப்ப அனல்காற்று

போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர். இந்த வெயில் கொடுமையால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் சென்றவர்கள் குடை பிடித்து கொண்டும், முகத்தில் துணியை மூடி கொண்டும் சென்றனர்.

இந்த வெப்பத்துக்கு மனிதர்கள் மட்டும் அல்ல விலங்குகளும் அவதிப்பட்டு வருகின்றன. ஆடு, மாடுகள் சாலையோரத்தில் உள்ள மரங்களின் நிழல் அல்லது பெரிய கட்டிடங்களின் நிழலில் தஞ்சம் அடைவதை காண முடிகின்றது.

குளிர்பான கடைகள்

திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வெப்ப அனல்காற்றால் மிகவும் அவதிபட்டதோடு, ஒதுங்க வழியின்றி சிரமப்பட்டனர்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள சாலையோரங்களில் உள்ள பதநீர் கடைகள், நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, தர்ப்பூசணி, கிர்ணி பழங்கள், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், கரும்பு ஜூஸ் போன்ற கடைகளை பொதுமக்கள் நாடுகின்றனர். குளிர்பான கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் இதன் விற்பனையும் அதிக அளவில் காணப்படுகிறது.


Related Tags :
Next Story