சத்தியில் பவானீஸ்வரர் கோவில் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சத்தியில்  பவானீஸ்வரர் கோவில் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

ஆர்ப்பாட்டம்

ஈரோடு

சத்தியமங்கலத்தில் பவானீஸ்வரர் கோவில் அருகில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகம் முன்பு நேற்று காலை 10.30 மணி அளவில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோம் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பி.தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

கோபி தாலுகா கணக்கம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்கள். எனவே கோவில் நிலத்தை அதிகாரிகள் ஏலம் விடுவதை ரத்து செய்ய வேண்டும் என கூறி விவசாயிகள் கோஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, தமிழ்நாடு அனைத்து சமய நிலங்கள் பயன்படுத்துவோர் பாதுகாப்புச் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.முத்துசாமி, கோபி வக்கீல் தேவராஜ், சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் எஸ்.சிவக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் உள்பட 100 பேர் கலந்து கொண்டார்கள்.


Next Story