தூத்துக்குடி பகுதியில் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் மின்தடை ஏற்படும் இடங்கள்


தூத்துக்குடி பகுதியில்  புதன்கிழமையும், வியாழக்கிழமையும் மின்தடை ஏற்படும் இடங்கள்
x

தூத்துக்குடி பகுதியில் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்றும் (புதன்கிழமை), நாளையும்(வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இன்று மின்தடை

தூத்துக்குடி நகர்ப்புற மின்பகிர்மான கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் புதிதாக அமைய உள்ள துணை மின்நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை, இனிகோ நகர், மாதாதோட்டம், ரோச் காலனி 1, 2, 3-வது தெரு, சகாயபுரம், லயன்ஸ் டவுன் 7-வது தெரு, மினி சகாயபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

நாளை

மேலும் தூத்துக்குடி அருகே உள்ள அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளபட்டி தருவைகுளம், பட்டினமருதூர், பனையூர், மேலமருதூர், அ.குமாரபுரம் மற்றும் திரேஸ்புரம், பூபாலராயர்புரம், லூர்தம்மாள்புரம், அலங்காரதட்டு, மாணிக்கபுரம். குரூஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல்புரம், முத்துகிருஷ்ணாபுரம், ராமர் விளை ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.


Next Story