தூத்துக்குடி பகுதியில் திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மின்தடை ஏற்படும் இடங்கள்


தூத்துக்குடி பகுதியில்  திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மின்தடை   ஏற்படும் இடங்கள்
x

தூத்துக்குடி பகுதியில் திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி பகுதியில் இன்றும்(திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

திங்கட்கிழமை மின்தடை

தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்பாதையை சீரமைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணி இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் திரேஸ்புரம் ரவுண்டானா, போலீஸ் குடியிருப்பு, தெற்கு பீச் ரோடு, கிரகோப் தெரு, தெற்கு ராஜா தெரு, எம்பரர் தெரு, பெரியகடை தெரு, விக்டோரியா தெரு, வண்ணார் 1,2,3-வது தெரு, ஜார்ஜ் ரோடு, கணசேபுரம், பாத்திமா நகர், தாமோதரநகர், சண்முகபுரம் பிராப்பர், பெருமாள் தெரு, இந்திரா நகர், வாடி தெரு, ஆதிபராசக்தி நகர், சங்கரப்பேரி விலக்கு முதல் புதூர்பாண்டியாபுரம் வரை உள்ள எட்டயபுரம் ரோடு பகுதிகள், தபால் தந்தி காலனி, அண்ணா நகர் 1 முதல் 7-வது தெரு வரை, சிதம்பர நகர், சுப்பையா முதலியார் புரம், மடத்தூர், இ.பி.காலனி, மதுரை பைபாஸ் ரோடு, முத்தையாபுரம் அருகே உள்ள அபிராமி நகர், ராஜீவ் நகர், பாலாஜி நகர், சாமி நகர், தேவகி நகர், முள்ளக்காடு, ஜே.எஸ்.நகர், சுந்தர் நகர், பாரதி நகர், தவசி பெருமாள் சாலை, திருச்செந்தூர் மெயின் ரோடு, பொன்னாண்டி நகர், காலாங்கரை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும்,

ஒட்டநத்தம் அருகே உள்ள பரிவில்லிக் கோட்டை, அயிரவன்பட்டி, பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓசனூத்து, புதியம்புத்தூர், ஆரைக்குளம், குலசேகரநல்லூர், சாமிநத்தம், ராஜாவின் கோவில், தெற்கு வீரபாண்டியாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என்று தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.

செவ்வாய்க்கிழமை

இதே போன்று தூத்துக்குடியில் ஊரக மின்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. இதனால் புதுக்கோட்டை அருகே உள்ள நடுகூட்டுடன்காடு, கீழகூட்டுடன்காடு, தெற்குசிலுக்கன்பட்டி, வல்லநாடு அருகே உள்ள கலியாவூர், சின்னகலியாவூர், காலாங்கரை, அம்பேத்கர்நகர், உழக்குடி, குளத்தூர் அருகே உள்ள கீழவைப்பார், சிப்பிகுளம், கல்லூரணி, எஸ்.வி.புரம், சாயர்புரம் அருகே உள்ள கொத்தலரிவிளை, புது நயினார் புரம், திருப்பணி செட்டிக்குளம், வளசக்காரன் விளை, சண்முகபுரம், பழைய காயல் அருகே உள்ள குடிநீர் வடிகால் வாரிய பகுதிளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும், என்று தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா தெரிவித்து உள்ளார்.


Next Story