தூத்துக்குடி மாவட்டபள்ளிகளில்10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டபள்ளிகளில் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் தொடங்கியது
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 19-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 33 மாணவர்கள், 10 ஆயிரத்து 996 மாணவிகள் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 29 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனை தொடர்ந்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும் எனவும், தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அந்தத்த தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நேற்று விநியோகிக்கப்பட்டன.