தூத்துக்குடி மாவட்டத்தில்தொழிலாளர் நலநிதியை அடுத்த மாதம் 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்


தூத்துக்குடி மாவட்டத்தில்தொழிலாளர் நலநிதியை அடுத்த மாதம் 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர் நலநிதியை அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர் நலநிதியை அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தொழிலாளர் நலநிதி

தொழிலாளர் நலவாரியம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் நலநிதி சட்டம் 1972 பிரிவு 2 (டி) -ன் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்களில் ஐந்தும், அதற்கு மேல் தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்கு ரூ.20-ம், வேலை அளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து ரூ.60 வீதம் தொழிலார் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.

அதன்படி 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதியை வாரியத்துக்கு செலுத்த வேண்டும். தொழிலாளர் நலநிதி பங்குத்தொகை உயர்த்துதல் தொடர்பான அரசாணை வெளியிடும் பட்சத்தில் நலநிதி பங்குத்தொகை மற்றும் அதன் அமலாக்க தேதி பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

நடவடிக்கை

வருடத்தில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த வேலையளிப்பவர் கடமைப்பட்டவர் ஆவார். தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினல் தொழிலாளர் நலநிதி சட்டம் வருவாய் வரிவசூல் சட்டத்தின் கீழ் அந்த தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதி தொகையை 31.1.23-க்கு முன்பு The Secretary, Tamilnadu Labour Welfare Board, Chennai-600 006 என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக, செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story