தூத்துக்குடி மாதாநகரில்திவ்ய தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்


தூத்துக்குடி மாதாநகரில்திவ்ய தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 12 Aug 2023 12:15 AM IST (Updated: 12 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாதாநகரில் திவ்ய தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள மாதாநகா் திவ்ய தஸ்நேவிஸ் மாதா ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சி மாலையில் ஜெபமாலையுடன் தொடங்கியது. மாலை 7 மணிக்கு தாளமுத்துநகா் பங்கு தந்தை நெல்சன்ராஜ் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. உதவி பங்கு தந்தை அமல்ராஜ் மற்றும் பங்குமக்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். விழா நாட்களில் தினமும் மாலையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் திருவிழா அன்று தூத்துக்குடி சவேரியார்புரம் பங்குதந்தை குழந்தைராஜ் தலைமையில் மாலை ஆராதனையும், தருவைகுளம் பங்குதந்தை வின்சென்ட் தலைமையில் மறையுரையும் நடக்கிறது. 11-ம் திருவிழா

திருவிழாவின் முக்கிய நிகழ்வான 10 ஆம் ஆடம்பர திருவிழா மாலை ஆராதனை தூத்துக்குடி சவோியாா்புரம் பங்கு தந்தை அருட்பணி குழந்தைராஜ் அடிகளாா் தலைமையில் தருவைக்குளம் பங்குதந்தை அருட்பணி வின்சென்ட் அடிகளாா் மறையுரையாற்றுகிறாா். விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 20-ந் தேதி 11-ம் திருநாள் அன்று காலை 7 மணிக்கு ஜெபமாலை, தருவைகுளம் உதவி பங்கு தந்தை சஜன்பாபு தலைமையில் ஆடம்பர பாடல் திருவிழா திருப்பலி நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஜெபமாலை, பாதிரியார் அமல்ராஜ் தலைமையில் அன்னையின் திருவுருவ தேர்பவனி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை தாளமுத்துநகா் பங்கு தந்தைகள் நெல்சன்ராஜ், அமல்ராஜ், மாதா நகா் ஊா் நிா்வாகிகள் தலைவா் மாியரமேஷ், செயலாளா் பாக்கியராஜ், பொருளாளா் பரலோக செல்வகுமாா் மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.


Next Story