தூத்துக்குடி-ஸ்ரீவைகுண்டத்தில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி-ஸ்ரீவைகுண்டத்தில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி-ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி

தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்செந்தூர் ரோட்டில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இசைசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story